கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,772 ஆக அதிகரிப்பு

depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection
depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection

நாட்டில் நேற்றைய தினம் 177 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,772 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 158 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 88,842 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 19 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொற்றுறுதியான 2,476 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.