கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனக் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படமாட்டர்! – கோட்டா அரசு உத்தரவாதம்

ajith niv1
ajith niv1

கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனப் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்ற கருத்தை கோட்டாபய அரசு நிராகரித்துள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை இலங்கை காவற்துறையினர் மாத்திரமே நிர்வகிப்பர் என்று மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக இருக்கும் என்றும், அங்கு சீனப் காவற்துறையினர் சட்டம் – ஒழுங்கை நிர்வகிப்பர் என்றும் பரவலாக பேசப்பட்டு வரும் கருத்தை நிராகரித்த அஜித் நிவார்ட் கப்ரால், கொழும்புத் துறைமுக நகரம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலம் கொழும்புத் துறைமுக நகரத்தை சீன காலனியாக மாற்றாது என்றும் அவர் கூறினார்.

போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையம் கொழும்புத் துறைமுக நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.