சிறுவர்கள் மத்தியில் பரவிவருகின்ற “எண்டி புட்டி மவுத் டிசிஸ்” என அறியப்படும் நோய்!

1619785323 hand put mouth disease 2
1619785323 hand put mouth disease 2

சிறுவர்கள் மத்தியில் ஒருவகை நோய் பரவி வருவதை காண முடிவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“எண்டி புட்டி மவுத் டிசிஸ்” என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியது என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

´கொரோனா தொற்று உள்ளிட்ட தொற்று நோய்களால் பிள்ளைகள் பீடிக்கப்படுகின்றனர். டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வகைகள் ஏற்படுவதை நாம் காண்கின்றோம். இப்படியிருக்க ´எண்டி புட்டி மவுத் டிசிஸ்´ என அறியப்படும் நோயும் பிள்ளைகள் மத்தியில் பரவிவருகின்றது´.