தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துக்கள்-மாவை

maavai senathirajah
maavai senathirajah

இந்திய நாட்டின் தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற தமிழ் நாட்டின் சட்ட சபைத் தேர்தலில் திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி
பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான்.

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும்
பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கைத் தமிழினமும் ரூபவ் தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும்
இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம்.

திராவிட இயக்கத் தலைவர் தமிழ் நாட்டு மக்கள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கொள்கை வழி நின்று
எதிர்காலத்திலும் தலைவர் ரூபவ் தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் வெற்றிக்கும் உழைத்திட
இலங்கைத் தமிழர் தரப்பில் அணைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்ரூபவ் வெற்றி பெறவைத்த மக்களுக்கும் எம்
பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்