இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

775f342c56b1c992640b777e64675004
775f342c56b1c992640b777e64675004

இலங்கையில் மேலும் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.