முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” நடுகை செய்வதற்காக முயற்சி!

received 527750301967225
received 527750301967225

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” ஒன்றினை நடுகை செய்வதற்கான முயற்சிகள் இன்று மாலையில் முன்னெடுக்கப்பட்ட்து.

இன்று மாலை குறித்த பொது நினைவுக்கல் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவியது

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் மத தலைவர்கள் ஒன்று கூடி குறித்த நினைவுக்கல்லினை நாட்டும் முகமாக நினைவுக்கல் கொண்டுவந்து இறக்கப்பட்ட நிலையில் . காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு குறித்த நினைவுக்கல்லினை நாட்டுவதை தடுத்திருந்தனர்

சம்பவ இடத்துக்கு வருகைதந்த காவல்துறையினர் குறித்த நினைவுக்கல் நாட்டும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோரிய நிலையில் காவல்துறையினருக்கும் மத தலைவர்களுக்குமிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றது. சட்டம் தமிழர்களுக்கு ஒன்றும் சிங்களவர்களுக்கு ஒன்றுமா? குருந்தூர் மலையில் இராணுவமும் பௌத்த துறவிகளும் ஒன்றுகூடும்போது கொரோனா வராதா ? அந்த நிகழ்வை என் நீங்கள் சென்று தடுக்கவில்லை? என கேள்விக் கணைகளை தொடுத்தபோது காவல்துறையினர் வாயடைத்து நின்றனர் இந்நிலையில் நேரம் இரவாகியமையினால் குறித்த பணிகள் மேற்கொள்வதில் உள்ள கடின நிலைமை காரணமாக குறித்த பணிகள் நிறுத்தப்பட்டு அது தொடருவோம் என தெரிவித்து குறித்த இடத்தை விட்டு சென்றுள்ளனர்.