நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 68,992 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டது!

172593 covid vaccine 1
172593 covid vaccine 1

நாட்டில் நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 68,992 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 348,619 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 12,558 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 265,465 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, 14,699 பேருக்கு இதுவரை ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.