முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த 26 பேருக்கு தடை

Pinai
Pinai

மட்டக்களப்பு 10 காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு 26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள் உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர், கரடியனாறு, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, காத்தான்குடி ஆகிய 10 காவல்துறை நிலையங்களில் மாவட்டதிலுள்ள நீதிமன்றங்களில் இந்த நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அதனை இரவோடு இரவாக உரியவர்களிடம் காவல்துறையினர் கையளித்துள்ளனர்.

இந்த நீதிமன்ற தடை உத்தரவில் காவல்துறை பிரிவுகளில் உள்ள பிரதேசங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக 16ம் திகதியில் இருந்து 14 நாட்களுக்கு எந்தவிதமான கூட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது எனவும்.

தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா நோய் தடுப்பு விதிக்கு மற்றும் சட்டத்திற்கு முரனான எதையும் நடாத்தக்கூடாது எனவும், அனுமதி அற்ற கூட்டங்களையே அல்லது நினைவேந்தல்கள், அமைப்பு மற்றும் குடும்பு உறவு சார்ந்த யாரும் உடந்தை அல்லது ஆதரவு வழங்க கூடாது என கட்டளையட்டு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது