தனித் தமிழ் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் திட்டம் சாத்தியமற்றது – மனோ கணேசன்

mano kanesan
mano kanesan

தேர்தல் முறைமை மாற்றத்தின் விளைவாக தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் முன்மொழியப்படுகின்ற தனித் தமிழ் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் திட்டம் சாத்தியமற்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம், வடக்கு, கிழக்கு வெளியே வாழும் சிறுபான்மை மக்களுக்கே அதிக ஆபத்து காத்திருக்கிறது.

எனவே, தற்போதுள்ள விகிதாசார முறைமையே சிறப்பானது என்றும், அது மாற்றப்பக்கூடாது என்றும் தாங்கள் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரும்புமாயின், வடக்கு, கிழக்கு வெளியே உள்ள தற்போதைய பிரதிநிதித்துவங்களை குறைத்துவிடாமல் வைத்துக்கொள்ள உத்தரவாதம் தரவேண்டும் என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.