தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து- மத்திய சுற்றுச்சூழல் ஆணையம்

X Press Pearl fire expolosion 750x375 1
X Press Pearl fire expolosion 750x375 1

கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள இரசாயனங்களினால் நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கப்பலில் 1,487 கொள்கலன்கள் உள்ள நிலையில் அவை 74,000 டன் நிறைகளை கொண்டுள்ளன. இவற்றில் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது