தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்-காவற்துறை மா அதிபர்

Screenshot 20210512 073453 Chrome copy
Screenshot 20210512 073453 Chrome copy

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என காவற்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்

அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில காவற்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வதை ஊடக காணொளிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த நபர்களின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுவதாக காவற்துறை மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறான செயல்களை தவிர்க்குமாறு காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறித்த சுற்றுநிருபம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவானால் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்