அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; காரணம் வெளியானது

202007070957187355 Tamil News Coronavirus death toll crosses 20000 in India SECVPF
202007070957187355 Tamil News Coronavirus death toll crosses 20000 in India SECVPF

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு காரணம் உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமையே என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதமானவர்கள் பாரதூரமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்றும் 20 சதவீதமானவர்களுக்கே அவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரதூரமான அறிகுறிகளைக் கொண்டுள்ள நோயாளர்களை உடனடியாக அடையாளம் காண வேண்டியது அவசியமென்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில், குறித்த நோயாளர்களை குணப்படுத்துவது சிரமமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விரைவாக அவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.