நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்

Ranil 800x466 1
Ranil 800x466 1

நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் இல்லாத ஒரு நாட்டை கோருவதாகவும் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கட்சிகளை மாற்றும்போது மாறாத நீண்ட கால தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தமை காரணமாக நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் 69 உறுப்பினர்கள் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்குப் பதிலாக இன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.