கோதுமை மா உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது

1625847318 9702105 hirunews
1625847318 9702105 hirunews

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதற்கு, அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

செரண்டிப் நிறுவனத்தினால், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஒரு இறாத்தல் பாணின் விலையை எதிர்காலத்தில் 10 ரூபாவினால் அதிகரிப்பதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என செரண்டிப் நிறுவனம் எழுத்துமூலம் உறுதியளித்துள்ளமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.