அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தர்மலிங்கம் கிருபாகரன்

IMG 4723 1
IMG 4723 1

இந்த நாட்டை காப்பாற்ற மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என முன்னனி சோசலிச கட்சியின் உறுப்பினரும் சமஉரிமை இயக்கத்தின் ஒருங்கமைப்பாளருமான தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒவ் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று(11)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை நாடு சீனாவுக்கும் தேவை இந்தியாவுக்கும் தேவை அமெரிக்காவிற்கும் தேவை இது எங்கள் மக்கள் தொடர்பான நலன்கள் சார்ந்தது அல்ல. இலங்கை மக்களை பாவிப்பதற்கு ஒரு கூட்டம் தேவை அந்த கூட்டம் தான் நாட்டில் தற்போது இருக்கின்ற ஆட்சியாளரும் சரி இதற்கு முதல் ஆட்சியாளராக இருந்தவரும் சரி இலங்கையை கூறுபோட்டு விற்கின்ற ஆட்களாகத்தான் இருந்திருக்கின்றனர்.

எனவே கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும். எனவே அதனை மாற்றுவதற்கு மக்கள் அரசியல்வாதிகள், ஊடகங்கள் சிந்திக்கவேண்டும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கும் போது மட்டும் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியுமே தவிர வெறுமனமே கட்சி அரசியலை மட்டும் கதைத்துக்கொண்டு இனவாதம். மதவாதம் மொழிவாதம் கதைத்துக்கொண்டு இந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது. 

எனவே இதனை எதிர்த்து போராடுகின்ற இடதுசாரி தலைமையுள்ள மக்கள் நலன்சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படும் அமைப்புக்கள் இதன் ஊடாக வெளியில் வந்து ஒரு போராட்ட மத்திய நிலையத்தை உருவாக்கி அரசுக்கு கொடுக்கப்படுகின்ற அழுத்தத்தின் ஊடாக மட்டுமே இதனை நிவர்த்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.