ஆசிரியர்கள் போராட்டம்; வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கம் ஆதரவு

IMG 20211106 WA0035
IMG 20211106 WA0035

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கமும் பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது

இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது

சுகயீன விடுப்பு அறிக்கையுடன் கூடிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் பட்டதாரி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு அரச சேவையில் இதுவரை கிடைக்காத உரிமைகளையும் நியாயான கோரிக்கைகனையும் ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளும் நோக்கில் சம்பள முரன்பாடுகளை நீக்குதல், பொருத்தமான பதவியுயர்வு நடைமுறைகளின்( MN-5, MN-7 தரத்தில்) வழங்குதல்,திறமை மற்றும் தராதரத்துக்கு ஏற்றவாறு கடமைகளை வழங்குதல், அனைத்து பட்டதாரி பயிலுனர் அலுவலர்களுக்கும் உடனடியாக நிரந்தரநியமனம் வழங்கல்போன்ற கோரிக்கைகளை முன்னைத்து நாடளாவியரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் பணிக்கு அமர்த்தப்பட்ட பட்டதாரிகள். சங்கம் ஆகியவற்றால் எதிரவரும் திங்கட்கிழமை (08.11.2021 ஆம் திகதி) முன்னெடுக்கலிருக்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கமாகிய நாம் எமது முழு ஆதரவினையும் நல்கிக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 08.11:2021 ஆம் நிகதி வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு சுகயீன விடுப்புடன் கூடிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு எமது பேராதரவை வழங்கிக்கொள்வோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.