இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை – றொகான் ராஜ்குமார்

received 5050178011692859
received 5050178011692859

இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அதன் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கும் மட்டுமே செயற்படுகின்றதே தவிர உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் இன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்

இங்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

நிதி அமைச்சர் பசில் றாஜபக்ச அவர்கள் தெரிவித்த அரச ஊழியர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தினை வன்மையாக கண்டித்து நிக்கின்றோம்

அமைச்சர் அவர்களுக்கு ஒரு விடயத்தினை நினைவு கூருகின்றோம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் ஆட்சியாளர்களுமே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சுமையாக இருந்துள்ளார்கள் என்பதன் விளைவே இன்று நாடு பின்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

மீண்டும் நாங்கள் வஞ்சிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது கடந்த 8 ஆண்டுகளாக 250 ரூபாவில் எங்கள் வாழ்க்கை செலவினை கொண்டு நடத்தி நாட்டு மக்களுக்கு சேவை செய்த எங்களை இந்த அவல நிலைக்கு தள்ளிவிட்டது வேறு யாரும் அல்ல முன்னாள் ஜனாதிபதி இப்போதைய பிரதமர் மகிந்த றாஜபக்ச அவர்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக மகிந்த றாஜபக்ச அவர்கள்,பசில் றாஜபக்ச அவர்கள் ஜனாதிபதி இணைப்பாளர்,நாமால் றாஜபக்ச அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாங்கள் இன்று அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

எங்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும் நாட்டின் தொழிலாளர்களை இழிவாக கதைப்பதற்கு அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை நாட்டை இந்த நிலமைக்கு பின்தள்ளி விட்டு தங்கள் அரசியல் தேவைகளுக்காக மக்களையும் ,அரச சக்கரத்தினையும்,அரச ஊழியர்களையும் இழிவாக கதைப்பதை நிறுத்தி 2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் எமக்கான நிலையான நிதியினை ஒதுக்கி புகையிரத திணைக்களத்திற்குள் எங்களுக்கு நிதந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று கோரி நிக்கின்றோம்.

இந்த நாட்டில் சுயநலம்மிக்கவர்கள் அதிகமாக வாழ்வதன் காரணமாக இந்த நாடு அதளபாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் அனைவரும் தங்கள் சுயநலத்தினை மறந்து நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக குரல்கொடுக்க வேண்டும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது மனித உரிமைகள் ஆணைக் குழுவை நாட போவதாக தெரிவித்திருந்தீர்கள் இதுதொடர்பில் தற்போதைய நிலைப்பாடு என்ன என இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் நாங்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ச்சியாக எங்களுக்கு இடம்பெறுகின்ற பழிவாங்கல்கள் அச்சுறுத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அடிப்படை தொழில் உரிமை மீறல்கள் தொடர்பில் பலதரப்பட்ட முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.

இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அதன் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கும் மட்டுமே செயற்படுகின்றதே தவிர உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என்றும் பகிரங்கமாக கூறுகிறேன் என குற்றம் சாட்டியுள்ளார்.