அரசாங்கத்தை ஊடகங்கள் பாதுகாத்தால் மிகப்பெரிய காப்புறுதியை செலுத்த நேரும் – பிரதமர்

mahinda
mahinda

ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கான அசிதிசி காப்புறுதி திட்டம் வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) நடைபெற்றது.

இதில் உரையாற்றிய பிரதமர், ஊடகங்களால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் முடியும், அதே அரசாங்கத்தை வீழ்த்தவும் முடியும் என்றார்.

ஆனால் அரசாங்கம் ஒன்றை ஊடகங்களால் பாதுகாக்க முடியாது.  அவ்வாறு பாதுக்காக்குமாக இருந்தால் இதனைவிட (இன்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட காப்புறுதி) பாரிய அளவிலான காப்புறுதியை வழங்க நேரும் என்றும் பிரதமர் கூறினார்.

அதேநேரம், தமக்கு ஊடகங்கள் மிகப்பெரிய சக்தியாகச் செயற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.