வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக மீண்டும் நா. உறுப்பினர் திலீபன் நியமனம்

IMG 20230223 144105
IMG 20230223 144105

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாகவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கையொப்பமிட்ட நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து திலீபன் எம்.பி இன்று (23.02) பெற்றுக்கொண்டார்.


இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் நாயகமும் , அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நியமன கடிதத்தை வழங்கி வைக்கும் போது உடனிருந்தார்