13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது

vikki
vikki

13ம் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதில் தாம் தெளிவுடன் உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக க.வி விக்னேஸ்வரன் தமது அரசியல் கொள்கையில் உறுதியானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டுடன் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்திருந்தார்.

மனோ கணேசனின் இந்த கருத்துக்கு பதிலளித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு என்ற இலக்கினை நோக்கியே தாம் பயணிப்பதாக தெரிவித்தார்.