பால்மாவின் விலை குறைப்பு !

milk powder
milk powder

இன்று முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


இதனடிப்படையில், இன்று முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பால்மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பால் தேநீர் தற்போது 100 ரூபா முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.