முன்னணியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் அறிவிப்பு

gajendrakumar
gajendrakumar

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இன்று கட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டபோதே கஜேந்திரகுமார் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த அறிவிப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ளவர்கள் மணிவண்ணனுடன் தொடர்புகளை பேணக்கூடாது என்றும் அந்த தொடர்புக்களை நிறுத்த கஜேந்திரகுமார் இருவார காலக்கெடு விதித்து இருக்கிறார்.