20வது திருத்தத்தில் திருத்தங்களுக்கான வாய்ப்புக்கள் – உதய கம்மன்பில

888888888
888888888

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு தேவைப்பட்டால் வரைபில் மேலும் திருத்தங்களை செய்யும் என்று இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .

வாராந்த அமைச்சரவை மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

20ஆம் திருத்தம் வர்த்தமானியிடப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைவானது நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரினால் முன்வைக்கப்படும் . மேலும் 20 வது திருத்தத்தின் வரைவு செப்டம்பர் 03 அன்று நீதி அமைச்சினால் வர்த்தமானியிடப்பட்டது.

எதிர்க்கட்சி, நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற இரண்டு வாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன .

நீதி அமைச்சரால் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும், முதல் வாசிப்பு நடைபெறும். இதைத் தொடர்ந்து 20 வது திருத்தத்தின் வரைவை பரிசீலித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்திற்கு இன்னும் ஒரு வாரம் ஒதுக்கப்படும்.

மேலும், எந்த பகுதிகளை திருத்த வேண்டும், பொது வாக்கெடுப்பு தேவையா என்பதை உயர் நீதிமன்றம் பின்னர் தெரிவிக்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .