பொதுக்குழுவை கூட்டும் தினம் குறித்து ஆலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் – மாவை

Untitled 1 copy 4
Untitled 1 copy 4

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் ஆலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் .

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுக்குழுவை கூட்டும் தினம் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரை ராசசிங்கம் கடந்த 11 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவித்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .