திலீபனின் நேர்மையான போராட்டத்தை உலகமே அறியும்- வேலுசாமி இராதாகிருஸ்ணன்

AAA 0021
AAA 0021

திலீபனின் நேர்மையான போராட்டத்தை உலகமே அறியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நோயாளியாக இருந்ததன் காரணமாகவே திலீபன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போது இராதாகிருஸ்ணன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திலீபனின் உண்ணாவிரத போராட்டம் என்பது அகிம்சை வழியிலான ஒரு போராட்டமாகும். அகிம்சை போராட்டத்தின் மூலமாகவே இந்தியாவிற்கு மகாத்மா காந்தி விடுதலையை பெற்றுக்கொடுத்தார்.

பூசா முகாமில் உண்ணாவிரத போராட்டம் இருக்கின்றவர்களின் கோரிக்கைகள் வேறு , திலீபன் உண்ணாவிரதம் இருந்த போராட்டத்தின் கோரிக்கை வேறு. திலீபன், தான் சார்ந்த சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராகவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

எனவே பொறுப்பான பதவியில் இருக்கின்றவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.