ஐ.தே.கவின் தலைவராக ரணிலே-மத்திய செயற்குழு

ranil
ranil

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என்று கட்சி அறிவித்துள்ளது.

கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் இடம்பெறும் எனவும், எனினும் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி வரை ரணில் விக்கிரமசிங்க தலைவராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது