20 ஆவது திருத்தம்: அரசாங்கத்துக்குள்ளேயே கருத்து வித்தியாசங்கள் இருக்கின்றன- விமல்

73939f063bd1f80250888d5e0be37445 XL
73939f063bd1f80250888d5e0be37445 XL

20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக சில சரத்துக்களில் கருத்து வித்தியாசங்கள் எங்களுக்குள்ளேயேஅரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றமையால் அதுதொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆராய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

குறித்த குழுவின் கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நாம் பல்வேறு விடயங்களை ஆராய்ந்தோம்.

இதுதொடர்பான எமது அனைத்துக் கருத்துக்களையும் அமைச்சரவைக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்துவோம்.

பெரும்பான்மையான சரத்துக்களுக்கு நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களுடன்தான் காணப்படுகிறோம். அதேநேரம், சில சரத்துக்களில் கருத்து வித்தியாசங்கள் இருப்பதால், இதுதொடர்பாகவும் தீவிரமாக ஆராயவுள்ளோம்.

அனைத்து நடவடிக்கைகளையும் நாம் நிச்சயமாக மேற்கொள்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.