கிளிநொச்சியிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுக்கு தடை !

IMG20180926102112
IMG20180926102112

கிளிநொச்சி மாவட்டத்தில் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று (புதன்கிழமை) சென்றிருந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் இதுகுறித்த நீதிமன்றக் கட்டளையை வழங்கியுள்ளார்.

இதன்படி, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15-09-2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாட்களில் எவ்விதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள், கூட்டங்கள் எதனையும் நடத்தக்கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தியாகி திலீபனின் நினைவு நாட்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கும் நீதிமன்றத்தினால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.