திலீபனின் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற உணர்வு தமிழ் மக்களிடம் இல்லை- சுமந்திரன்!

1597209432M.A.Sumanthiran
1597209432M.A.Sumanthiran

திலீபனின் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற உணர்வு தமிழ் மக்களிடம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்தக் கூடாதென யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும்படி கோரவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டிக்க வேண்டுமென மக்கள் தன்னெழுச்சியாக விரும்பியிருந்தனர். ஆனால் திலீபனின் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற உணர்வு தமிழ் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை. சில அரசியல் கட்சிகள் அதை ஒழுங்கு செய்கிறார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.