புதிய அரசியலமைப்பு சட்டமூலத்திற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு!

download copy
download copy

19 ஆம் திருத்தத்தின் ஊடாக அடைந்த விடயங்களை விடவும் பின்நோக்கி செல்லும் விதத்தில் 20 ஆம் திருத்த சட்டமூல வரைவு காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள 20 ஆம் திருத்த சட்டமூல வரைவு தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனாலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தனியார் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த விடயங்களை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.