இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகள் கவலைகொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர்!

Antonio Guterres 300920 seithy
Antonio Guterres 300920 seithy

இலங்கையில் சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்காணிக்கப்படுவது குறித்து, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரெஸ், கவலை எழுப்பியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், ஐ.நா பொதுச் செயலர் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராடுபவர்கள் உள்ளிட்டவர்கள் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது குறித்து, சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்கு பின்னரும் விசாரிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.