மூன்றாவதுநாளாகவும்தொடர்வுள்ள 20ற்குஎதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் !

Supreme Court 720x380 1
Supreme Court 720x380 1

20வது திருத்தத்தின் வரைபை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களின் மீதாள பரிசீலனை இன்றும் மூன்றாவது நாளாக உயர்நீதிமன்றத்தில் தொடரவுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன் பரிசீலிக்கப்படுகின்றன.

மனுக்கள் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பரிசீலிக்கப்பட்டன. 32 மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இதுவரை தங்கள் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.

மீதமுள்ள 07 மனுக்கள் சார்பிலான சமர்ப்பணங்கள் இன்று வழங்கப்படும்.

உத்தேச 20 வது திருத்த வரைபை எதிர்த்து 39 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட வபை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ, சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட மனுதாரர்கள் கோருகின்றனர்.

5 நீதிபதிகள் குழாம் தமது தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்.

இதற்கிடையில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, காமினி லோகுகே, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு கோரி மனுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.