திலீபன் பின்லேடனா? பாலச்சந்திரனைச் சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா? – நாடாளுமன்றில் கஜேந்திரன் கேள்வி

Selvarasa Gajendran Speech Kumaravadivel Guruparan Jaffna News. 768x436 1
Selvarasa Gajendran Speech Kumaravadivel Guruparan Jaffna News. 768x436 1

தனது மக்களுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா அல்லது  12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட், தண்ணீர் கொடுத்துவிட்டுச் சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா?”என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பிய அவர், மேலும் கூறுகையில்,

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தியாகி திலீபனை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன்  ஒசாமா பின்லேடனா அல்லது  2 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட், தண்ணி கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள்  பின்லேடன்களா எனக் கேட்க விரும்புகின்றோம்.

அடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தியாகி திலீபனைப் பற்றி மிகவும் கேவலமாக விமர்சிக்கின்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். தியாகி திலீபன் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு மாவீரன்; தியாகி. எனவே, கெஹலியவுக்கும் டக்ளஸுக்கும் திலீபனைப் பற்றி விமர்சிக்க அருகதை கிடையாது”என குறிப்பிட்டுள்ளார்