மக்கள் போராட்டம் அவசியமாகும்- தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர்!

3a9ced56 693a 4193 b2a3 5a2e2fd71034
3a9ced56 693a 4193 b2a3 5a2e2fd71034

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மநாதன் அவர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், இந்த இட மாற்றம் அரசாங்கம் மறைமுகமாக விடுத்துள்ள எச்சரிக்கையே என கூறினார் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் அவர்கள்.

அவர் தொடர்ந்து கூறுகையில் “மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளும், அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசியல் வாதிகளும், பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை அரசாங்கம் மறைமுகமாக விடுத்துள்ளது” எனவும்

மயிலத்தமடு மட்டுமல்ல, மயில வெட்டுவான் மணல் மேடும் , சிற்றாண்டி, சந்தன மடு ஆற்றுமணல் படுக்கையும் பறிபோகப்போகிறது இதனை எதிர்த்து முறியடிக்க ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் அவசியமாகும்” எனவும் அமைப்பின் சர்பாக அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.