தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகாது என அறிவிப்பு !

Untitled 1 55
Untitled 1 55

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது

பதில் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் கையொப்பத்துடன், பொலிஸ் தலைமையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உள்நுழைய முடியாது எனவும், குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், தனிமைப்பத்தப்பட்ட பகுதிகளுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுவதற்கு, விசேட தேவைகள் காணப்படுமாயின், ஊழியர்களின் விபரங்களை குறிப்பிட்டு உரிய நிறுவனங்களின் ஊடாக சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகமிடம் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி,

1 நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி,
2 ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் நாட்கள்,
3.ஊழியர் தொடர்பான தகவல்கள்,
4.ஊழியருக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான தகவல்
5.சேவைக்கு அழைக்கும் முக்கிய காரணம்
6.கோரிக்கை முன்வைக்கும் அதிகாரியின் பெயர், பதவி நிலை அல்லது உத்தியோகபூர்வ முத்திரை போன்ற விடயங்களை சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகமிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஊடாக பயணிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.