ஊடகவியலாளர் காண்டீபன்’பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்தன் மீது மரக் கூட்டுத்தாபன ஊழியர்களால் தாக்குதல் முயற்சி!

WhatsApp Image 2020 11 09 at 9.18.04 PM
WhatsApp Image 2020 11 09 at 9.18.04 PM

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் காண்டீபன் மற்றும் பிரதேச சபையின்ரசாந்தன் மீதும் மரக் கூட்டுத்தாபன ஊழியர்களால் தாக்குதல் முயற்சி ஒன்று இன்று (09) நடைபெற்றுள்ளததாக தெரிவிக்கஸ் படுகின்றது .

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பனிலிருந்து தற்போது பருத்தித்துறை வரை வீதி அமைக்கும் பணிகள் இடம் பெற்றுவரும் நிலையில் வீதியோரங்களில் உள்ள மரங்களை மரக் கூட்டுத்தாபனம் அரிந்து ஏற்றிச் செல்கின்ற நிலையில் இன்றைய தினம் குடத்தனை சந்திப் பகுதியில் தேக்கு மரங்களை அரிந்து போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் போட்டுள்ளதுடன்

போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமலும் மரங்களை அரிந்து வீழ்த்திக் கொண்டிருந்த போது அதனை அவதானித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தன் குறித்த ஊழியர்களிடம் நீங்கள் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரிந்த மர கிளைகளின் இலைகளையும் இடையூறு இல்லாமல் அகற்றியும் விடவேண்டும் என்றும் தெரிவித்தபோது மரக் கூட்டுத்தாபன பணியாளர்கள் இது தங்கள் வேலை இல்லை என்றும் மரங்களை அரிந்து ஏற்றுவது மட்டும்தான் தமது வேலை என்றும் தெரிவித்து முரண்பட்டுள்ள நிலையில்

குறித்த விடயத்தை ஊடகவியலாளர் த.காண்டீபனிற்க்கு தெரிவித்திருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர் செய்திக்காக ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தவேளை அவரது புகைப்பட கருவியை பறிக்க முற்பட்டதுடன் அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறும் கேட்டுள்ள நிலையில் |ஊடகவியலாளர் காண்டீபன் தன்னால் அடையாள அட்டையை காண்பிக்க முடியும்

என்றும் முதலில் நீங்கள் யார் என்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுள்ள நிலையில் ஒருவர் மட்டுமே தனது பணியாளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அவரிடம் ஊடகவியலாளர் தனது ஊடகவியலாளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

இந்நிலையில் பணியிலீடுபட்ட மரக் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஊடகவியாலளர் காண்டீபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோரை வீதியின் மறுபக்கத்திற்க்கு வந்து தாக்க முற்பட்டுள்ளதுடன்.

கெட்ட வார்த்தைகளால் திட்டியும் தீர்துள்ளனர். வீதி அபிவிருத்தி மேற்கொள்ளும் அம்பன் பருத்தித்துறை வீதியின் அருகிலுள்ள மரங்களை அரிந்து அவ்விடத்தை சுத்தப்படுத்தாது மரக் கூட்டுத்தாபன ஊழியர்கள் விட்டுச் செல்வதும் தனியார் மற்றும் நெல் வயல்களில் அவற்றை வீசி விட்டு செல்வதும் குறிப்பிட தக்கது

WhatsApp Image 2020 11 09 at 9.18.10 PM
WhatsApp Image 2020 11 09 at 9.18.10 PM