நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியானது!

பரீட்சை
பரீட்சை

நடப்பு ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தம் பத்து மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற நிலலையில் அதன் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 200 புள்ளிகள் என்ற முழுமையான மதிப்பெண்களைப் பத்து மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அதன்படி அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு:

எம். எப். முஹமட் அமர் – ஸாஹிரா கல்லூரி, மருதானை


ஏ.எச். சிஹாத் சந்தினு – தர்மபாலா வித்தியாலயம் அரவல

தேவுலி யசஸ்மி திலகரத்ன – ஸ்ரீ சுமனஜோதி ஆரம்ப கல்லூரி, இங்கிரிய


எம்..டி.எச் சஸ்மித்தா குணதிலக – பண்டாரகம மத்திய கல்லூரி, களுத்துறை

எஸ்.டி. சியாதி விதும்சா – சங்கமித்தா பாலிக்கா வித்தியாலயம், காலி


டபிள்யூ.ஏ தசிந்து அவிஷான் – தங்காலை ஆண்கள் பாடசாலை, கதுருபொத்த

பி.கே. டோவிந்து சிரஞ்சித் – ஜனாதிபதி கல்லூரி, எம்பிலிப்பிட்டிய


எச்.எம்.செனுதி தம்சரா – எஹெலியகொடை ஆரம்பக் கல்லூரி

எச்.எம். தேனுஜா மனுமிதா பண்டார – சிரிபுர ஆரம்பக் கல்லூரி, பொலன்னறுவை


யெஹார யெத்மினி எபா – பெண்கள் உயர்நிலைப் பாடசாலை, கண்டி


ஆகிய மாணவர்களே , 200 புள்ளிகள் என்ற முழுமையான மதிப்பெண்களைப்பெற்றுள்ள்ளார்கள் என பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்