திவுலபிட்டிய – பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது

corona.COVID .MINUWANGODA
corona.COVID .MINUWANGODA

நாட்டில் மேலும் 628பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 627 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது.