கண்டி நில அதிர்வு தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை!

download 4 2
download 4 2

கண்டி பகுதியில் அண்மைக்காலமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் நில அதிர்வு தொடர்பாக மேலும் நான்கு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாக புவிச்சரிதவியல் மற்றும் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பகட்ட ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப் பணியகத்தின் தவிசாளர் அனுர வரபொல தெரிவித்துள்ளார்.

கண்டி திகன பகுதியில் கடந்த சனிக்கிழமை, நான்கு சந்தர்ப்பங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களிலும், குறித்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வை மேற்கொள்ளுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் நான்கு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் புதிய பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனுரா வல்பொல தெரிவித்தார்.