மஹர சிறைச்சாலை கலவரம் ; 145 பேரிடம் வாக்குமூலம்

eddd7036 dddddddd
eddd7036 dddddddd

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது.

அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், மஹர சிறைச்சாலையில் இணைக்கப்பட்ட மருத்துவரிடமிருந்தும் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி இன்று (08) நிலவரப்படி இதுவரை 54 சிறைச்சாலை அதிகாரிகள், 12 மருத்துவர்கள், 07 ஆண் செவிலியர்கள் மற்றும் 73 கைதிகள் என 145 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக இறந்த 11 கைதிகளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வத்தளை நீதவான் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி 04 பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.