இலங்கை-மாலைதீவுக்கு இடையில் நான்கு ஒப்பந்தங்கள்!

maltive
maltive

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு பயணமாகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.

இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய புதிய துறைகள் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

விசா வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர ​அபேவர்தனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.

உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உயர்கல்வி மற்றும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாலைதீவு உயர்கல்வி அமைச்சர் இப்ராஹிம் ஹசனும் கைச்சாத்திட்டனர்.

சமூக பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தொழில்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகள் தோரதெனிய மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.