உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; நட்ட ஈடு கோரும் அமெரிக்கர்

eater attack
eater attack

கடந்த ஏப்ரல் 21உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது தனது 12 வயது மகள் உயிரிழந்தமைக்கு நட்ட ஈடு கோரி அமெரிக்க வைத்தியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவ்வாறான ஒரு குண்டு தாக்குதல் நடத்தப்படும் என புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையினாலேயே பாரிய அனர்த்தம் ஏற்பட்டதாகவும் தனது மகளை இழக்க நேரிட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதற்கான, உரிய நட்டஈட்டை வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

எலெக்சாண்டர் ஏலோ என்ற அமெரிக்க வைத்தியரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.