தாழிறங்கியுள்ள ஹட்டன் கொழும்பு பிரதான வீதி..!

1608786142 HAtton 2
1608786142 HAtton 2

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக வட்டவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை பெய்த கடும் மழையினால் குறித்த பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இந்தநிலையில் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு வட்டவளை போக்குவரத்து காவற்துறையினர் கோரியுள்ளனர்.

தாழிறங்கியுள்ள குறித்த வீதிப்பகுதியை விரைவில் புனரைமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை சேவையாளர்கள் முன்னெடுத்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலனறுவை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான்கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தில் விரைவில் நீர் நிரம்புவதாக பொலனறுவை நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஒரு வான் கதவின் மூலமாக வினாடிக்கு 280 கன அடி நீர் வெளியேறுவதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக பொலனறுவை கல்லேல்ல பகுதியும், பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், கல்லேல்ல – மன்னம்பிட்டிக்கு இடையிலான பகுதியும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக பொலனறுவை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.