கண்ணீரால் நிறைந்தது வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயம்!

IMG 20201226 WA0065
IMG 20201226 WA0065

சுனாமி ஆழிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்டோரின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இடம்பெற்றது.

1001 உடல்கள் புதைக்கப்பட்ட குறித்த நினைவாலையத்தில்தம்மை விட்டு பிரிந்த தமது உறவுகளுக்காக உணவுகளை படையல் வைத்து, கண்ணீர் சொரிந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவுத் தூபியின் பிரதான சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏற்றி வைக்க,
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து உறவினர்கள் தமது உயிர் தீத்த உறவுகளுக்கான சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய நினைவு அஞ்சலி நிகழ்வில் 100 க்கு மேற்பட்ட உறவுகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20201226 WA0062
IMG 20201226 WA0066
IMG 20201226 WA0053
IMG 20201226 WA0064
IMG 20201226 WA0046
IMG 20201226 WA0058
IMG 20201226 WA0063
IMG 20201226 WA0061
IMG 20201226 WA0052
IMG 20201226 WA0054
IMG 20201226 WA0055
IMG 20201226 WA0050
IMG 20201226 WA0063 1
IMG 20201226 WA0061 1
IMG 20201226 WA0056
IMG 20201226 WA0049
FB IMG 1545829224681