விமர்சிக்காது என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள்!

gota2
gota2

வெறுமனே என்னை விமர்சிப்பதை விடுத்து என்னைப் பற்றிய தவறாக தெரிவிக்கப்படுகின்ற விடயங்களையும், யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களையும் மறக்குமாறு தமிழ் புலம்பெயர்ந்தோரைக்கூட நான் கோர விரும்புகிறேன். இதனால் யாருக்கும் பயனில்லை என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும்.

பெரும்பான்மை சமூகத்தின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விடயங்களை சிறுபான்மை மக்கள் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகத்தில் அது எதிர்வினையாற்றும். சிறுபான்மை சமூகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கைக் குடிமக்கள். அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேறிய சமூகங்களில்கூட இந்த பிரச்சினை உள்ளது எ தெரிவித்துள்ளார்.

நான் சர்வாதிகாரியாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். நான் உண்மையில் ஒழுக்கமான நபர், நான் இனவெறியற்றவன் என்பதை எனது செயல்களால் நிரூபித்துள்ளேன்.

நான் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மட்டும் வேலை செய்யவில்லை. அதனால்தான் நாட்டை வளர்ப்பதில் என்னுடன் இணையுமாறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்தேன்.

உங்களுக்கு தெரியும், எதிர்க்கட்சி என்னை ஒரு சர்வாதிகாரி அல்லது எதேச்சாதிகரம் கொண்டவர் அல்லது எதுவாக இருந்தாலும் காட்ட முடியும். ஆனால் நான் அப்படிப்பட்டவன் இல்லை.

என்னைப் பற்றிய சரியான விம்பத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.