மன்னாரில் மேரி பஸ்ரியன் அடிகளாரின் நினைவு நாள் அனுஷ்டிப்பு

mari bastan 1
mari bastan 1

படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (06) மன்னாரில் நினைவுகூரப்பட்டது.

வங்காலை புனித ஆனால் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ தலைமையில் இன்று காலை 6 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் சமூக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வங்காலை பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை மற்றும் ஆலய மேய்ப்பு பணி சபையினர், கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர், பங்கு மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து சென்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் இணைந்து மிகவும் சிறப்பான முறையில் இரத்ததான நிகழ்வை நடாத்தினர்.

இரத்த தான நிகழ்வைத் தொடர்ந்து தேவையுடையவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.