கால்நடைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் தொற்று!

OIP 4
OIP 4

நாட்டில் கால்நடைகளுக்கு பரவிவரும் வைரஸ் நோய் தற்போது வரை 14 மாவட்டங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் குருநாகல் முதலான மாவட்டங்களில் இந்த வைரஸ் நோய் அதிகளவில் பரவியுள்ளதாக கால்நடை வளம், பண்ணை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை ஆகிய கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நோய் தொடர்பிலான தகவல்களை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடைகளுக்கு இடையே பரவி வரும் இந்த வைரஸ் நோய் தொடர்பில் ஆராய்வதற்காக அந்த அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நோய் எவ்வாறு பரவுகின்றது? அதனை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண மட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் தெளிவுபடுத்தும் முறைமை குறித்து இந்த குழு பரிந்துரைககளை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.