புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகள்

a577c5e95d0da239cf07c21ee21ceeab M
a577c5e95d0da239cf07c21ee21ceeab M

இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள் தொடர்பான அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறிப்பிட்ட வகையில் இன்று அதி காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்படுவதாகவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்

01. இன்று அதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

காவற்துறை பிரிவு

• கிரேண்ட்பாஸ் காவற்துறை பிரிவு

• மாளிகாவத்த காவற்துறை பிரிவு

• தெமட்டகொட காவற்துறை பிரிவு

02. புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசம்

பொரளை காவற்துறை பிரிவு

– கோதமீபுர தொடர்மாடி வீடமைப்பு பகுதி

– 24 தோட்டம் (கோதமீபுர)

– 78 தோட்டம் (கோதமீபுர)

கம்பஹ மாவட்டம்

இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

• வத்தளை காவற்துறை பிரிவில் வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவ வத்த

• கிரிபத்கொட காவற்துறை பிரிவில் ஹூணுபிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெடிகந்த

• நீர்கொழும்பு காவற்துறை பிரிவில் தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் MC வத்த குடியிருப்பு பகுதி

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.