4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க முடிவு!

345bdcdbe3f1a5de7969ce67efdbdc45 XL 1
345bdcdbe3f1a5de7969ce67efdbdc45 XL 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன.

19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர்.

இவர்களுள் 2,340 பேர் சிங்கள மொழியிலும், 1,300 பேர் தமிழ் மொழியிலும், 646 பேர் ஆங்கிலம் மொழியிலும் 3 வருட காலம் கற்கை நெறியினைத் தொடர்ந்த பின்னர் 1 வருட காலம் ஆசிரியர் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த நகழ்வில் கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க, அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வை இடமுடியும்.