ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இரத்து

gota 2
gota 2

இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தினை குத்தகை அடிப்படையில் வழங்கும் ஒப்பந்தத்தினை இரத்து செய்ய உள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு முன்னதாக தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிற்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில் தான் இலங்கை ஜனாதிபதியானதும் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹம்பந்தோட்டை துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பொருளாதார ஆலோசகரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தினால் இந்தியா தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அதனால் குறித்த ஒப்பந்ததத்தினை இரத்து செய்யுமாறு இந்திய அரசு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.